/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பிளாஸ்டிக் கம்பெனியால் பாதிப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்பிளாஸ்டிக் கம்பெனியால் பாதிப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
பிளாஸ்டிக் கம்பெனியால் பாதிப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
பிளாஸ்டிக் கம்பெனியால் பாதிப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
பிளாஸ்டிக் கம்பெனியால் பாதிப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 27, 2010 01:52 AM
நாமக்கல்: "புதுச்சத்திரம் யூனியன் நவனி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் பிளாஸ்டிக் டேங்க் தயாரிக்கும் கம்பெனியால் சுற்றுச்சூழல் பாதிக்கும்' என, மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் யூனியனுக்கு உட்பட்ட நவனி கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு அருகே, குஜராத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் நிலம் வாங்கி பிளாஸ்டிக் டேங்க் தயாரிக்கும் கம்பெனி துவங்க கட்டிடம் கட்டி வருகிறார். இந்த கம்பெனியால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தொழிற்சாலை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.